சுடர்

செஞ்சுடரின் சிந்தனைகள்

Wednesday, December 08, 2004

நேசக்குமாரருக்கு....

நேசக்குமாரருக்கு ஒரு கேள்வி
திண்ணையில் வெளிவந்த உங்கள் புர்கா - பர்தா கட்டுரைக் கண்டேன்.

இஸ்லாம் தீர்மானிக்கும் பெண்களின் உடைப்பற்றிய விவாதத்திற்கு செல்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு கேள்வி.

உங்களின் கல்வி மற்றும் சிந்தனை, நீங்கள் ஏற்றுக் கொண்ட சித்தாந்தம் இவற்றின் அடிப்படையில் பெண்களின் உடை எவ்வாறு அமைய வேண்டும்?, எதிலிருந்து எதுவரை மறைக்கப்பட வேண்டும்? உடையின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் விளக்க வேண்டும். பின்னர் இஸ்லாமிய உடைப் பற்றிய உங்கள் கருத்தின் நிலைப்பாடு என்னவென்பதை அலசலாம்.

செஞ்சுடர்.

2 Comments:

 • At 5:32 PM, Blogger புதிய கனா said…

  excuse me பெண்கள் எப்படி உடைபோடவேண்டுமென்று அலச வேண்டியது (எதை எதை மறைக்க வேண்டும்) இரண்டு ஆண்களாகிய நீங்களிருவரும் அல்ல! பெண்கள். அதிலும் இதில் குறிப்பாக முஸ்லிம் பெண்கள். நடக்குமோ?
  போய் வேலையைப் பாப்பியளா

   
 • At 2:17 PM, Blogger dondu(#11168674346665545885) said…

  அப்படிப் போடுங்கள் அரிவாளை, புதிய கனா அவர்களே. 100% சரி.
  சம்பந்தப்பட்டப் பெண்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள். இதில் மூக்கை நுழைக்கும் ஆண்கள் எம்மததினாராலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஒரு மதம் அதைப் பற்றி மிகக் கடுமையாகக் கூறுகிறதென்றால் அம்மதமும் கண்டிக்கப் பட வேண்டியதே.
  தாலிபானியர்கள் இதைச் செய்து ஆஃப்கன் பெண்களின் பாவத்தைக் கொட்டிக் கொண்டார்கள். அவர்கள் கேவலமாகத் தோற்று ஓடியப் போது அவர்களுக்கு யாரும் பரிதாபப்படவில்லை.
  ஆண் ஆதிக்கம் எல்லா மதங்களிலும் உண்டு.
  தமிழ்த் தீவிரவாதிகளைப் பற்றிய ஒரு கதையில் முன்னேற்ற நோக்கு கொண்டவர்கள் எனக் கருதப்படும் ஆண் போராளிகள் பெண் போராளிகள் சேலைதான் உடுத்த வேண்டும் என்று அபத்தமாகக் கூற, ஒரு பெண் போராளி அவர்களிடம் ஆண்கள் முதலில் வேட்டி அணியட்டும், பிறகு பெண்கள் உடையைப் பற்றிப் பேசலாம் என்றுக் கூறி அவர்கள் வாயை அடைக்கிறாள். இது தொடர்க் கதையாகச் சமீபத்தில் விகடனில் வந்தது. கதையின் பெயரை மறந்து விட்டேன். அன்புடன்,
  டோண்டு

   

Post a Comment

<< Home