சுடர்

செஞ்சுடரின் சிந்தனைகள்

Friday, December 17, 2004

பெண் உடையும் - ஆண் உணர்வும்.

எப்படி உடை உடுத்த வேண்டும்? எந்த அளவு மறைக்க வேண்டும் என்பதை ஒவ்வாரு பெண்ணும் தனக்குத் தானே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்ற (பெண்ணுரிமைக்?) கருத்தை முன் மொழிபவர்கள் 'உடை எதற்கு?" என்ற கேள்வியை ஆழமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

அழகிற்காக...
அழகியல் என்பது உயிரினம் விரும்பும் ஒரு உணர்வுப்பூர்வமான கலையாகும். ஒவ்வொருவரும் முனைப்புடன் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதற்கு தயாரானால் அதை குற்றம் சொல்பவர்கள் அழகியலை அறியாதவர்களாகி விடுவார்கள். அந்த வகையில் ஒரு பெண் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதற்காக எந்த உடையையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அழகிற்காக மட்டும்தான் ஆடை என்ற நிலை இருந்தால் தான் இந்த வாதம் பொருந்தும். அழகியலுக்காக மட்டும்தான் உடை என்று எந்த பெண்மையும் கூறத் துணியாது என்று நம்புகிறோம்.

உடலை மறைக்க...
அழகியலுக்காக ஆடை என்பதை விட உடலை மறைப்பதற்குத்தான் ஆடை என்பது அதை விட முக்கியத்துவம் பெறுகிறது.

மனிதன் பிறக்கும் போது நிர்வாணமாக பிறக்கிறான். அவன் நிர்வாணமாக பிறந்து விட்டான் என்பதற்காக அவனை நிர்வாணமாகவே யாரும் வைத்துக் கொள்வதில்லை. பிறந்தவுடன் துணி சுற்றப்பட்டு நிர்வாணம் மறைக்கப்பட்டு விடுகிறது. இதற்கு மேலதிக காரணங்கள் கூட இருக்கலாம். காரணம் எத்துனையாக இருந்தாலும் நிர்வாணத்தை மறைத்தல் என்பது அதில் பொதிந்துதான் உள்ளது. பிறந்ததிலிருந்து உடலோடு உறவாட துவங்கிய உடை மனிதன் மரணித்த பிறகும் அவனை அடக்கம் செய்யும் வரை (சில நம்பிக்கைப்படி எரிக்கும் வரை) அவன் உடலை மூடி மறைத்து நிற்கிறது. அவன் தான் மரணித்து விட்டானே.. என்பதற்காக யாரும் அவனை நிர்வாணமாகப் போட்டு விடுவதுமில்லை.

மானத்தை மறைக்கவே உடை என்ற வார்த்தைதான் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும் நாம் அந்த வார்த்தையை இங்கு பயன்படுத்தவில்லை. காரணம் மானம் என்றால் என்ன? என்று அடுத்து ஒரு கேள்வி வந்துவிடக கூடாது என்பதற்காகத்தான்.

உடலை மறைப்பதற்கு தான் உடை என்றால் 'எதற்காக உடலை மறைக்க வேண்டும்' என்ற கேள்வியையும் அறிவார்ந்த பெண்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.

அடுத்தவர்கள் முகம் சுளிக்காமலிருக்க,அடுத்தவர்களை தொந்தரவுபடுத்தாமலிருக்க,அடுத்தவர்களை வரம்புமீற விடாமலிருக்க,அடுததவர்களை மனபாதிப்புக்குள்ளாக்காமலிருக்க,இப்படி எத்துனையோ 'அடுத்தவர்களை' இங்கு எடுத்துக்காட்டி விடலாம்.
இந்த 'அடுத்தவர்களில்' உடன் பிறந்தவர்கள். குடுபத்தார். சுற்றத்தார்.வெளி மனிதர்கள் என்று அனைவரும் இடம் பெற்றுக் கொள்வர்.

குளிக்கும் போது பயன்படுத்தும் ஒற்றை உடையுன் ஒரு பெண் வீட்டின் உள்ளே இருந்துக் கொண்டு 'நான் தான் உடை உடுத்தியுள்ளேனே..' என்று தத்துவம் பேசமாட்டாள். பேசினாலும் அதை வீட்டார்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.

கணவனிடம் நெருக்கமாக இருக்கும் போது உள்ள குறைந்த அளவு ஆடையுடன் ஒரு பெண் வெளிப்பட்டு 'மறைய வேண்டியது மறைந்துதான் உள்ளது' மேலதிக உடை தேவையில்லை. நான் இப்படியே சுற்றி வருகிறேன்' என்று முடிவு செய்ய மாட்டாள்.

குளிககும் சந்தர்பங்கள் போன்ற தனிமையும - கணவனோடு இருக்கும் போதும் - வீட்டில் பிறருக்கு (கூட பிறந்தவர்கள்) மத்தியிலிருக்கும் போதும் பெண்ணின் உடையில் வித்தியாசம் அவசியம் தேவைப்படுகிறது.

மாராப்பு விலகிய நிலையில் ஒரு பெண்ணை அவளது சகோதரன் பார்த்தால் முகம் சுளிப்பான். அவளுக்கு உணர்த்துவான். அதேநிலையில் வேறொரு ஆண் அவளைப் பார்த்தால் அவன் முகம் மலர்வான். முகம் மலராவிட்டாலும் மனம் அதை ரசிக்கத்தான் செய்யும். இந்த வித்தியாசங்கள் அனைவருக்கும் புரியத்தான் செய்யும். (ஆண் முகம் மலர்வான் என்றவுடன் நேசக்குமாரர்கள் 'ஆண்களெல்லாம் தெருப் பொருக்கிகளா.. காமுகர்களா... என்றெல்லாம் ஆவேசக் கனல் கக்குவார்கள். இத்தகைய மனநிலை உள்ளவர்கள் ஆண்களில் யாருமில்லை என்று நேசக்குமாரர்களால் உத்திரவாதம் கொடுக்க முடியாது. பெண்களை குறைவாகக் காட்டி ஆண்களை உசுப்பிவிட்ட 'பாய்ஸ்' திரைப்படத்தை இங்கு நினைவுக் கூறலாம்.)

ஆண்களின் மனநிலை உணரப்படும் போது பெண்கள் கூடுதலாக தனது உடலை மறைக்க வேண்டும் என்ற யதார்த்த நிலை விளங்கும்.

ஆண்களின் மனநிலையை உணர்ந்து அனுபவிக்க முடியாத - வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் பெண்கள் 'எங்கள் உடையை நாங்களே தீர்மானித்துக் கொள்வோம் என்று முடிவெடுப்பது - வாதிப்பது முதிர்சியற்ற நிலையின் வெளிபாடேயாகும்.

பெண்ணை அங்குலம். அங்குலாமாக ரசிக்கக் கூடிய மனநிலையில் இருப்பவன் ஆண். உடை உடுத்திக் கொண்டு போனாலும் உரசிப் பார்ப்போம் என்று உந்தப்படுபவன் ஆண். இடையை பிடிப்பது. பின்புறம் உரசி நிற்பது. கழுத்துப் பகுதியிலும். பிடரியிலும் வெப்பமான மூச்சுக் காற்றை விட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துவது. அதுபற்றி நண்பர்களிடம் கமாண்ட்ஸ் அடிப்பது என்று ஆண்களிடமிருந்து பெண்கள் அனுபவிக்கும் பாலியல் சீண்டல்களை - படும் அவதியை சென்னை பஸ் பயணங்கள் கோடிக் கோடியாக கதை சொல்லும்.

ஆண்களும் - பெண்களும் பாலியல் துன்பத்திற்கு ஆளாவதற்கு பெண்களின் உடை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதை பெண்களால் மறுக்க முடியுமா...

பெண்களின் உடம்பும் - உடையும் ஆண் தூண்டப்படுவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது என்ற வாதத்தை இஸ்லாம் முன் வைக்கிறது.
இதற்கு எதிரான வாதங்களை எந்த பெண்ணாவது முன் வைத்தால் இன்னும் கூடுதல் விபரங்களுடன் அவர்களை நாம் சந்திப்போம் இணையத்தில். (தொடர்வோம்)

4 Comments:

 • At 4:36 PM, Blogger வித்யாசாகரன் (Vidyasakaran) said…

  True.
  But, why should a woman be asked to change her way of dressing, when it's man, who has to change his way of thinking? Probably it's difficult.
  Isn't it like asking your neighbor to hide the sweets at their home lest your kid might steal it? Is it not you who has to control your son? However difficult it is?
  I feel bad for giving this caomparison, comparing women with an inanimate thing. Still, that's where your opinion is coming from too.

   
 • At 8:29 PM, Blogger சுடர் said…

  This comment has been removed by a blog administrator.

   
 • At 8:31 PM, Blogger சுடர் said…

  பெண் உடையும் ஆண் உணர்வும்

  உண்மை,

  உன் உடையை மாற்றிக்கொள் என்று பெண்ணிடம் ஏன் கேட்கவேண்டும், ஆணல்லவா தன் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். நிச்சயாக அது கஷ்டமாக இருந்தாலும்கூட.

  அடுத்த வீட்டுக்காரனை இனிப்பு பண்டங்களை ஒளித்து வை. ஏனென்றால் என்பையன் வந்து எடுத்துவிடுவான் என்று சொல்வதைப்போல் உள்ளது. பையனையல்லவா திருத்த வேண்டும்? அது கடினமாக இருந்தாலும்கூட.

  உயிரற்ற பொருளோடு ஒப்புமைபடுத்தி பேசுவது தவறு என நினைக்கிறேன். இன்னும் உங்களின் கூற்று எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியவில்லை. அதனால்தான்.

  -வித்யசாகரன்

  சகோதரா... கஷ்டமாக இருந்தாலும் கூட ஆண்தான் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உங்கள் கருத்து கேட்பதற்கு சிறந்ததாக இருக்கலாம். நடப்புக்கும் - யதார்தத்திற்கும் தான் நாம் தீர்வு காணவேண்டுமே தவிர அழகாக இருக்கிறது என்பதற்காக தத்துவங்களை முன் வைக்கக் கூடாது.

  "நான் எதற்காக என் பணத்தை வங்கியிலும் லாக்கரிலும் வைத்து பூட்ட வேண்டும் திருடர்களே இல்லாமலாகிவிட வேண்டியதுதானே.. " என்று எவராவது முடிவெடுத்தால் அது நடைமுறைக்கு சாத்தியமானதுதானா.. என்பதை சிந்தியுங்கள்.

  கட்டுப்படாத பையனை குறித்து ஒரு நல்ல தந்தை அடுத்த வீட்டுகாரருக்கு அறிவுரை செய்வதில் எந்த தவறும் இல்லை. இங்கு 'கட்டுப்படாத, திருந்தாத பையன்" என்பதை அடிகோடிட்டுப் படியுங்கள்.

   
 • At 10:54 PM, Blogger சுடர் said…

  This comment has been removed by a blog administrator.

   

Post a Comment

<< Home