சுடர்

செஞ்சுடரின் சிந்தனைகள்

Sunday, December 26, 2004

உடை கழற்றும் ஆண் வக்கிரம்.

பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா.. என்று கட்டுரை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை
நேசக்தகுமாரர் அக்கறையோடு வெளிபடுத்தி உள்ளார்.

அந்தக் கட்டுரையின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர் எழுதிய கட்டுரையை அவரே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை
என்பது புலப்படும்.

முஸ்லிம் பெண்கள் அணியும் மேலதிகமான உடைக்கும் அவர் எடுத்துக் காட்டிய தகவல்களுக்கும் தொடர்பு எதுவுமில்லை என்பதை நாம் அடுத்தப்பகுதியில் விளக்குவோம். அப்போது அந்த கட்டுரையின் யதார்த்தம் என்ன என்பது உலகிற்கு விளங்கும்.

பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக" பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை
நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.

அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி ட்கப்படுகிறது.

"பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்"?.
அவர் பதிலளித்தார்.
"நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்"

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும், ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல்
சார்ந்த கவர்ச்சிதான்.

பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக்
கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்."எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்."

இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.

ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

I A S தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து IAS அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு
செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.

இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?
1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.
2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும். (இங்குதான் அதாவது
மூன்றாவது கருத்துக்குதான் நேசக்குமாரர் விமர்சனக்கட்டுரை வெளியிட்டுள்ளார். அதை அடுத்துப் பார்ப்போம்)

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரியும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை
ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடைஉடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு
பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் நேசக்குமாரர்கள் அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று முன்பு கேள்வி வைத்தோம். நேசக்குமாரர் பதில் சொல்லவில்லை.
" அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் பார்த்துக் கொள்வார்கள் போய் ஜோலியை பாப்பியலா" என்று அழகுத் தமிழில் முழங்கிய அந்தப் பெண்ணும் இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.

பர்தா கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்கியுள்ளதா... நேசக்குமாரர் முன் வைத்துள்ள கருத்துக்களை இனி பார்ப்போம்.

15 Comments:

 • At 6:50 PM, Blogger ROSAVASANTH said…

  பர்தா கண்ணியத்தை வழங்குகிறதாவா? என்னய்யா உங்களில் ஒருவனுக்கு கூட சுய விமர்சனம் செய்யும் புத்தி இல்லையா? அப்பறம் மாற்றான் திட்டினால் மட்டும் பொத்துகொண்டு வருகிறது.

   
 • At 7:00 PM, Blogger wichita said…

  even in countries where purdah is prevalent violence against women continues.barbaric practices like stoning are unthinkable in any civilised societies.only in those so called islamic nations they are still in vogue.
  what is your response to this.
  in usa and europe women travel in public transport, go to work and use public places and spaces without wearing purdah. this does not result in eve teasing. in mumbai i have seen women wearing skirts walking at night without any fear. so it is a question of law and order and respecting others freedoms and rights. when will you see logic and reason. does science say that men are by nature like that. you assume so to justify this form of dress.this had been taken to extremes in afghanistan under talibans. society should be made safe for women irrespective of the dress they wear or religion they beleive in. relegion may suggest some dress code but should not dictate to women to wear this or not to wear.ultimately in a liberal society irrespective of the dress they wear all women should be
  treated equally.and they are treated so in europe and usa.
  this.

   
 • At 7:04 PM, Blogger wichita said…

  jayalalitha does not wear purdha, she wears sari and her hair is visible.as an actress and dancer she had worn different dresses.so your argument is absurd.

   
 • At 7:24 PM, Blogger ROSAVASANTH said…

  /even in countries where purdah is prevalent violence against women / I don't agree with this vichita. There is (several times more) violence in in countries where purdah is prevalent violence against women.

  You should note not a *single* person among these guys wrote anything self critically, till now. I am complteley fed up with this. If we have to talk only about Hindu fundamentalism, it is better to do ....... பர்தா கண்ணியத்தை வழங்குகிறர்தா! யாருக்கய்யா வேணும் கண்ணியம்! சுதந்திரத்தை வழங்குகிறதா என்றல்லவா கேள்வி இருந்திருக்க வேண்டும்? ஆயிரம் வருஷம் முன்னால் உள்ள விஷயங்களை எல்லாம் எந்த மற்றமில்லாமல், தொடர்ந்து நியாயபடுத்தி ஒரு தர்கத்தை முன்வைப்பது. எதையாவது இவர்கள் கண்டித்திருக்கிறார்களா? இந்துத்வவாதிகளுக்கு இவர்களை விட வேறு யார் உதவுகிறார்கள்? எனக்கேன்னவோ இந்து சமுதாயம்(இந்த பெண்கள் விஷயத்தில் மட்டும்) மிக மிக முன்னேறிய நிலையில் ஆரொக்கியமாக இருப்பதாகவே தெரிகிறது-சவுதி இஸ்லாத்துடன் ஒப்பிடும்போது அல்ல, தமிழ் இஸ்லாத்துடன் ஒப்பிடும்போதே!

   
 • At 7:32 PM, Blogger ROSAVASANTH said…

  கவனிக்க வேண்டியது, மேலைநாட்டில் இரவு 2மணிக்கு மாரை காட்டிகொண்டு போகும் பெண்ணிடம் யாரும் (சட்டம், ஒழுங்கு ஒரு எழவும் தேவையில்லை, மரியாதையாகவே யாரும்) பிரச்சனை பண்ணுவதில்லை. இவர்கள் சமுதாயத்தில் (சரி, என் சமுதாயத்திலும்) மூடி இருக்கும்போதே இத்தனை வன்முறை. இதிலிருந்தே இவர்கள் மதம், கலாச்சாரம் எந்த 'கண்ணியமாய்' நடப்பதற்கான எந்த எழவையும் ஆண்களுக்கு கொடுக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

   
 • At 2:47 PM, Blogger Jafar ali said…

  ஒரு இஸ்லாமியன் இஸ்லாத்தின் வட்டத்தில் இருந்து கொண்டு தான் எதிர் மறையான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். ஆனால் சகோதரரே! உங்கள் ஆக்கத்திற்க்கான பின்னூட்டங்களை கவனியுங்கள். உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம் எவருக்கும் இருப்பதாக கொஞ்சமேனும் தெரியவில்லை.

   
 • At 10:59 AM, Blogger சுடர் said…

  /********
  பர்தா எங்கு அமுல்படுத்தப்படுகிறதோ அங்குகூட பெண்களுக்கெதிரான கொடுமைகள் தொடருகின்றன. கொடுமையான அதாவது கல்லெரிதல் போன்றவை?நாகரீக சமுதாயத்திற்கு நினைக்கமுடியாததாக இருக்கிறது

  அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொது இடங்களிலும் விண்ணிலும் பர்தா இன்றி பயணம் செய்வதால் ஈவ் டீசிங் நடந்தது கிடையாது. ஸ்கர்ட் போட்ட பெண்களை இரவில் மும்பாயில் இந்த பயமும் இல்லாமல் நடமாடுவதை பார்த்திருக்கிறேன். எப்பொழுது இதற்கான லாஜிக்-கையும் காரணத்தையும் பார்க்க போகிறீர்கள்.

  ஆண் இப்படிப்பட்ட குணம் உடையவன் என்று அறிவியல் சொல்கிறதா?.

  நீங்கள் இதுபோன்ற (பர்தா) உடைகளை நியாயப்படுத்த முயல்கிறீர்கள். இதுதான் தாலிபான் கையில் இருந்த ஆப்கானிஸ்தானை தீவிரமாக்கியது. இதுபோன்ற உடைகளை நிராகரிக்கும் பெண்களுக்கு அவர்கள் நம்பும் மதத்திடமிருந்து சமுதாயம்தான் பாதுகாப்பு தரவேண்டும்.

  மதம் சில உடை முறைகளை கூறலாம். ஆனால் அதை இப்படித்தான் உடுத்தவேண்டும் என்றோ இப்படி உடுத்தக்கூடாது என்றோ சொல்லக்கூடாது. கடைசியாக, இதுபோன்ற உடைகளை புறக்கணிக்கும் broad minded பெண்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள்.

  ஜெயலலிதா பர்தா அணியவில்லை. அவர் புடவையே அணிகிறார். அவரின் கூந்தலை பார்க்க முடிகிறது. நடிகையாக, நாட்டியக்காரியாக அவர் பலவிதமாக உடைகளை அணிந்தவர். எனவே உங்கள் வாதம் தவறானது.

  -Wichita
  *********/

  குறிப்பு: ஆங்கிலத்தில் எதிர்கருத்துக்கள் வைக்கப்பட்டாலும் தமிழ் மட்டும் அறிந்தவர்களுக்கு எதிர்கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக அவற்றை தமிழ் படுத்தியுள்ளோம். இருப்பினும் ஆங்கிலத்தில் கருத்து வைத்தவரின் அந்த உணர்ச்சி இங்கு முழுதுமாக வெளிப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. இனி எழுதுபவர்கள் தமிழிலேயே தங்கள் கருத்துக்களை வைத்தால் இந்த சிக்கல்களை தவிர்க்கலாம்.

  இனி எதிர் உணர்வுகளின் நிலைகளைப் பார்ப்போம்.

  உங்கள் எண்ணங்களிலிருந்து இரண்டு கருத்துக்களை நான் விளங்குகிறேன்.
  1) அமேரிக்க ஐரோப்பிய நாடுகளில் பர்தா அணிவதில்லை. அங்கெல்லாம் ஈவ்டீஸிங் போன்ற புகார்கள் இல்லை. (அதனால் புர்காவினால் ஈவ்டீஸிங் போன்ற கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு என்ற வாதம் தவறு) இன்றைக்கும் பம்பாயில் குறைந்த ஆடையுடன் பெண்கள் சுற்றிவரத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதா அணிவது பர்தா அல்ல. எனவே அதை புர்காவிற்கு உதாரணமாக்கக் கூடாது.

  2) புர்கா அணிந்த பெண்களுக்கு எதிரான கொடுமையும் நடக்கத்தான் செய்கின்றன. (இது நேசக்குமாரர்களின் அணியின் பிரதிபலிப்பு இதற்குரிய பதிலை நாம் அடுத்தகட்டங்களில் பார்க்கலாம்.
  ............
  நமது சிந்தனையும் - நாம் பின்பற்றும் கொள்கையும் என்ன என்பதில் நமக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும். நமது கருத்துக்களும் அதை தழுவியே வெளிபட்டு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

  நிர்வாணம் தவறில்லை அதுவே இயல்புநிலை என்று ஆண்களும் - பெண்களும் எந்தவித உடையும் இல்லாமல் முழு நிர்வாண வாழ்வை மேற்கொள்வதும், அத்தகைய மக்களை உள்ளடக்கிக் கொண்ட சில பகுதிகளும் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. ராகிங் - ஈவ்டீஸிங் போன்ற எதுவும் அங்கு நடப்பதில்லை. இந்தியாவில் அது போன்ற நிலை வந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று வாதித்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா..?

  "வாழ பிறந்தோம் எதையும் எப்படியும் அனுபவித்துக் கொள்ளலாம் தவறில்லை" என்ற கொள்கையைப் பின்பற்றும் மேற்கத்திய நடைமுறைகளை நாம் விவாதிக்கும் பெண்ணியத்தோடு ஒப்பு நோக்குவது முறைதானா என்பதை நீங்கள் முதலாவது கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்ப அமைப்பைப் பற்றியோ - திருமண வாழ்வைப் பற்றியோ எந்தவிதக் கவலையும் கொள்ளாமல் விரும்பினால் யார் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்துக் கொள்ளலாம் இச்சைக்கு வடிகால் தேடிக் கொள்ளலாம் என்ற சித்தாந்தம் அங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. பாவம் புண்ணியத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு தேவைகள் பூர்த்தியாகும் வழிகள் தட்டுபாடின்றி கிடைக்கும் இடங்களில் ஈவ்டீஸிங் போன்ற வக்கிரங்கள் குறைந்துக் காணப்படுவது ஒன்றும் ஆச்சரியமான காரியமல்ல. அதே நிலை இந்தியாப் போன்ற நாடுகளுக்கும் நாம் விவாதிக்கும் பெண்ணியத்திற்கும் ஒத்துவரும் என்று நினைக்கிறீர்களா..?

  அனைத்தும் கிடைக்கும் அந்த நாடுகளிலும் ஆண்களுக்குத்தான் கொண்டாட்டம். அதனால் தான் 13 - 14 வயதுக்குட்பட்ட பெண் சிறுமிகளின் பட்டாளம் எவனுடைய கருவையாவது சுமந்து கசங்கிப்போகின்றன. 'கவர்ஸ்டோரி'களில் மட்டும் வரும் ஆடம்பர - ஆராவரமில்லாத இந்த உண்மைகள் அவசர உலகின் சிந்தனையை தொட்டுப் பார்ப்பதேயில்லை. (இந்த பெண்ணிய அணுகுமுறையும் கலாச்சாரமும் சிறப்பானவைதான் என்று எதிர்வாதம் வைப்பீர்களா.. ஒருவேளை நீங்கள் அவ்வாறு வாதம் வைத்தால், 'நான் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டேன்' என்று நீங்கள் கருதினாலும் சரி பரவாயில்லை இப்பொழுதே உங்களுக்கு பதிலளிப்பதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்).

  பம்பாயில் பெண்கள் குட்டைப்பாவாடை அணிந்து செல்கிறார்கள் என்பது உண்மைதான். அத்தகையப் பெண்கள் எந்த ஆணுடைய உள்ளத்திலும் - உணர்விலும் தீயை வார்ப்பதில்லை என்று உங்களால் கூற முடியுமா..? உணர்ச்சியைத் தூண்டும் இத்தகைய துண்டு உடைகள் எத்துனை மொபைல் கேமராக்களுக்குள் திருட்டுத்தனமாக பதிவாகின்றது. இணையங்களில் அது என்னப்பாடு படுகிறது என்பதையெல்லாம் இணையங்களில் உலா வருபவர்களால் அறியாமலிருக்க முடியாது. (எல்லா ஆண்களும் ஒட்டு மொத்தமாக இத்தகைய மனநிலை உள்ளவர்கள்தான் என்று நான் கூறுவதாக தயவு செய்து அவசரப்பட்டு யாரும் முடிவெடுத்துவிட வேண்டாம்)

  எங்கோ ஒரு ஹோட்டலில் தனிமையில் குளியலறையில் குளித்த நடிகை திரிஷா கேமிராவின் உள்ளே சிக்கி இணையத்தில் வந்து இன்று பெரும் சர்ச்சையையும் சட்ட பிரச்சனையையும் உருவாக்கியுள்ளதை இங்கு நினைவுக் கூறலாம்.

  புகழ்பெற்ற நடிகர்கள் - இதர மனிதர்களாகட்டும் அல்லது புகழ் பெறாத சராசரி மனிதராகட்டும் இவர்களில் எந்த ஆணையாவது எந்த ஒரு பெண்ணாவது அலங்கோலமாக போட்டோ - வீடியோ எடுத்துள்ளாலா... அதை வைத்து மகிழ்ந்துள்ளாலா... சொல்லுங்கள் பார்ப்போம். பெண் பற்றிய ஆணுடைய புத்தி இன்னுமா விளங்க மறுக்கிறது?

  குட்டைப் பாவாடைப் போன்ற ஒட்டு உடைகள் தவறில்லை என்றால் மார்பு தெரியும்படி (உடையுடன்தான்) ஒட்டப்படும் ஷகிலாவின் போஸ்டர்கள் மீதும் இந்திய அழகி? ஐஸ்வரியாராயின் போஸ்டர்(தாளம்) மீதும் மாதர் சங்கங்களும் = இதர பெண்ணியக்கவாதிகளும் (இவர்கள் அனைவரும் பெண்கள்) தார் பூசினார்களே... இதன் அர்த்தம் என்ன? இவர்களெல்லாம் பெண் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று விலாசித்தள்ளலாமா...

  தொடை தெரியும் குட்டைப் பாவாடையில் சில பெண்கள் சுதந்திரத்தைத் தேடி அதைக் கொண்டாடும் போது மார்பைத் திறந்து நடிகைகள் சுதந்திரம் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

  விதண்டாவாதம் செய்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இறுக்கமான உடையோ அல்லது எடுப்பான உடையோ ஒரு பெண் அணிந்தால் என்றால் குறைந்தபட்சம் கண்ணாடியின் முன் நின்று தன் அழகை தானே ரசித்துக் கொள்ள முடியும். பிறர் தன் அழகைப் பற்றி பேசுவதை கேட்டால் மனம் மகிழ முடியும். இதுதவிர தன் உடையும் உடலும் ஆண்களின் உள்ளத்தில் எத்தகைய தாக்கத்தை எற்படுத்துகிறது என்பதை அவளால் விளங்கவே முடியாது ஆண்களால் ஏதாவது துன்பத்தை அவள் அனுபவிக்காதவரை. இதற்கு மாற்றமான ஆக்கப்பூர்வமான மாற்றுக் கருத்துக்கள் உங்களிடம் இருந்தால் வெளிபடுத்துங்கள்.

  அடுத்து,
  ஜெயலலிதாவின் உடையும் - முஸ்லிம் பெண்ணின் உடையும் வித்தியாசம் என்ன? விளங்குவோம்.

   
 • At 3:16 PM, Blogger Fakhrudeen.H said…

  பர்தாவைப்பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ளாததால் தான் இத்தகைய முழுமையாக வேகாத விமர்சனங்கள் > ஆகவே முதலில் பர்தாவைப்பற்றி முழுதுமாக விளக்கி விடுங்கள் சகோதரரே!

   
 • At 7:48 PM, Blogger சுடரகன்: சிவா முருகையா said…

  ஆடை கழைவதை ஆண்கள் வக்கிரமாகப் பாற்கிறீர்கள். ஆனால் ஆரம்பத்தில் பர்தா போன்ற ஆடைகளை பெண்கள் அணியவேண்டும் என்று சட்டமிட்டதே ஆணாதிக்க வக்கிரம் என ஏன் பார்க்க மறுக்கிறீர்கள். அதாவது தனது மனைவி தனது சொத்து. அதை யாரும் பார்க்கக் கூடாது. ஆனால் தான் ஏழு பேரை சட்டபூர்வமாக புணர்வதோடு இன்னும் வீட்டுப் பணிப்பெண்களாக வரும் ஏழைகளையும் புணரலாம். இதுதானே பர்தாவூடு முஸ்லீம் மதவாதம் முன்வைக்கும் தத்துவம்?

  "எம் மதத்திலும் எமக்கு சம்மதம் இல்லை"
  சுடரகன

   
 • At 3:09 PM, Blogger thamillvaanan said…

  பெண்களின் உணர்வுகளும் விருப்பங்களும் ஆண்களாலேதான் வெளிப்படுத்தப்படுகின்றன. பெண் எப்படியாவனவள் எப்படி இருக்கவேண்டும் என்றும் தீர்மானிப்பதும் ஆண்களாகவே இருக்கும் போது ( அதுவும் மேற்கத்தைய நாடுகளில் கூட) எவ்வாறு அவர்களுடைய உணர்வுகளும் விருப்பங்களும் கடும் மதகோட்பாடுகளை பின்பற்றுகின்ற சமூகத்திடம் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கமுடியும்.

  ஆணும் பெண்ணும் உணர்வு நிலையில் சமனானவர்கள். ஆண்களுக்காக பெண்கள் இப்படித்தான இருக்கவேண்டுமென்றால் இப்படித்தான் உடை அணியவேண்டுமென்றால் அந்த ஆண்களை தான் திருத்தவேண்டுமே ஓழிய பெண்களை அல்ல.

  பெண்களின் உணர்வுகளை விருப்பங்களை எந்த ஆணும் கையிலெடுக்கவேண்டாம்.

  அன்புடன்
  தமிழ்வாணன்.

   
 • At 11:45 PM, Blogger சன்னாசி said…

  பொதுவாக, ஆண்களைப் பார்த்தால் பெண்களின் மனமும் கெட வாய்ப்புள்ளது என்பதால், பெண்கள் பர்தா போட்டுக்கொள்ளவேண்டும் என்னும் ஆண்கள் அனைவரும் தாங்களும் பர்தா போட்டுக்கொள்ள ஆரம்பித்தால், பிறகு நான் வாயையே திறக்கமாட்டேன் என்று கூறிக்கொள்கிறேன். அதைச் செய்யுங்கள் முதலில். இங்கே என்றால் இங்கே வைக்க, அங்கே என்றால் அங்கே வைக்க அவர்கள் என்ன குப்பைக்கூடைகளா.

   
 • At 11:48 AM, Blogger ஜோ/Joe said…

  This comment has been removed by a blog administrator.

   
 • At 11:49 AM, Blogger ஜோ/Joe said…

  புர்தா அணிவது ஒரு பரிந்துரையாக இருப்பதில் தவறில்லை .மாறாக அது ஒரு கட்டாய சட்டமாக இருப்பது கண்டிப்பாக காட்டுமிராண்டி தனமும் ஆணாதிக்கமும் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

  இன்னொரு கேள்வி..ஆண்களின் இச்சையான பார்வையை தடுக்கவே இதுவெனில் ,5 வயது குழந்தையும் 80 வயது முதியவரும் அணிய கட்டாயப்படுத்தப்படுவது எதனால்..ஆண்கள் என்ன அவ்வளவு வக்கிரமாகவா இருக்கிறார்கள்?

   
 • At 12:30 PM, Blogger வானம்பாடி said…

  //இன்னொரு கேள்வி..ஆண்களின் இச்சையான பார்வையை தடுக்கவே இதுவெனில் ,5 வயது குழந்தையும் 80 வயது முதியவரும் அணிய கட்டாயப்படுத்தப்படுவது எதனால்..ஆண்கள் என்ன அவ்வளவு வக்கிரமாகவா இருக்கிறார்கள்?//

  மிகச் சரியான கேள்வி! பர்தா பாதுகாப்பிற்கு என்ற வாதத்தை தகர்க்க இது ஒன்றே போதும். இதெல்லாம் ஆணடிமைத்தனம் என்ற குற்ற உணர்ச்சியே கொஞ்சம் கூட இல்லையே இவர்களுக்கு..

   
 • At 10:07 AM, Blogger சுடர் said…

  தொடர்ந்து கருத்து வைத்துக் கொண்டிருக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!.

  ஒரு நல்ல சமூக மாற்றம் அல்லது சீர் திருத்தம் என்ற எண்ணத்துடன் தான் நாம் அனைவரும் இத்தகைய கருத்துப் பரிமாற்றங்களை செய்துக் கொள்கிறோம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. உண்மையில் இதற்காகத்தான் கருத்து பரிமாற்றம் என்றால் கருத்தோட்டங்கள் தொடர்வதில் எத்தகைய ஆட்சேபனையும் இல்லை. இதற்கு மாற்றமான எண்ணமிருந்தால் விவாதித்து பிரயோஜனமில்லை.

  உதாரணமாக எதிர்கருத்து வைக்கக் கூடியவர்களை நாம் 'மதவாதி' என்றோ 'நாத்திகர்' என்றோ அடையாளப்படுத்துவதில்லை. அவர்களின் கருத்துக்களை மட்டுமே கவனிக்கிறோம். ஆனால் பல கட்டுரைக்கு பின்னூடல் செய்பவர்களில் சிலர் 'இஸ்லாமிய அடிப்படைவாதம்' 'இஸ்லாமிய மதவாதம்' போன்ற வார்த்தைகளை முன்வைக்கிறார்கள். இதை தவிர்க்கலாம். பின்னூடல் செய்பவர்கள நாமும் இது போன்று அடையாளப்படுத்தினால் விவாதம் வேறு கோணத்தில் திரும்பி விடும்.

  "ஆணும் பெண்ணும் உணர்வு நிலையில் சமனானவர்கள். ஆண்களுக்காக பெண்கள் இப்படித்தான இருக்கவேண்டுமென்றால் இப்படித்தான் உடை அணியவேண்டுமென்றால் அந்த ஆண்களை தான் திருத்தவேண்டுமே ஓழிய பெண்களை அல்ல". என்கிறார் சகோதரர் தமிழ்வாணன்.

  அறிவால், ஆற்றலால், திறமையால், ஆணும் பெண்ணும் சமமாக இருக்கலாம். ஏன் இன்னும் சொல்லப்போனால் பல சந்தர்பங்களில் ஆணையும் விஞ்சி நிற்கிறாள் பெண் என்பதை எந்த சிந்தனையாளனும் ஒப்புக் கொள்வான். ஆனால் பிரச்சனை அறிவையோ, ஆற்றலையோ, திறமையையோ சார்ந்ததல்ல. இது உடல் சார்ந்த பிரச்சனை என்பதை ஏன் விளங்க முடியவில்லை?

  திறமைக்கும், ஆற்றலுக்கும், அறிவுக்கும் உடை அணிய சொல்லவில்லை இஸ்லாம். எந்த சித்தாந்தமும் கூட அப்படி சொல்லாது. உடை அணியும் அனைவருமே உடலை மறைக்கத்தான் அணிகிறார்கள். அறிவையும் ஆற்றலையும் திறமையையும் மறைக்க யாரும் உடை அணிவதில்லை.

  பெண் எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்துக் கொள்ளட்டும் அந்த சுதந்திரத்தில் ஆண் தலையிடக் கூடாது. ஆணின் உணர்வைத் தூண்டும் படியான உடையை அவள் உடுத்திக் கொண்டு வெளிப்பட்டாலும் ஆண்தான் தன்னைத் திருத்திக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். மாறாக ''இப்படி உடை உடுத்தாதே" என்று அவளுக்கு உணர்த்தக் கூடாது அப்படி உணர்த்துவதே ஆணாதிக்க போக்கு என்பது சகோதரரின் வாதம்.

  கட்டுரையின் ஆரம்பத்திலிருந்தே இந்த வாதத்திற்கு நாம் பதிலளித்து வருகிறோம். இப்போது நான் கேட்கும் கேள்வி. திருந்தாத, திருத்த முடியாத ஆண்களை என்ன செய்வது? ஆண் திருந்த வேண்டும் என்ற வாதம் சுவையானதுதான். ஆனால் திருந்த வேண்டுமே..

  "திருடனா பார்த்து திருந்தா விட்டா திருட்டை ஒழிக்க முடியாது" என்று பட்டுக் கோட்டை பாடினான். இதன் நிலவரமும் அப்படித்தான். அவனாக பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத வரை பெண்களுக்கு எதிரான சீண்டல்கள், வக்கிரங்கள், வல்லுறவு போன்றவை தொடரத்தான் செய்யும். முழு உடையுடன் வந்தாலே உரசி பார்க்க நினைக்கும் ஆண் வக்கிரம் அரைக்குறை ஆடையுடன் வந்தால் அலட்சியப்படுத்தி விடுமா... என்ன.

  நீங்களெல்லாம் பெண்மையை கண்ணியமாகக் கருதும் ஆண்களைக் கருத்தில் எடுத்துக் கொண்டு அவர்களால் பெண்களுக்கு எந்த கெடுதியும் வராது என்ற கருத்தை முன் மொழிகிறீர்கள். அது உண்மைதான். அதனால் உலகில் உள்ள எல்லா ஆண்களையும் நல்லவர்கள் என்று நினைத்து விடலாமா...?

  பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்கள் குறித்த ஆயிரக்கணக்கான ஆய்வுகள் - வழக்குகள் - கருத்தோட்டங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறதே... இங்கெல்லாம் வெளிப்படும் ஆண் வக்கிரங்களை ஏன் புரிந்துக் கொள்ள மறுக்கிறீர்கள். சில நாட்களுக்கு முன் சன் டீவியின் 'நிஜம்' நிகழ்ச்சியில் ரகு என்பவனால் பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட ஒன்பது வயது சிறுமியை காட்டினார்கள். அந்த சிறுமி தனக்கு ஏற்பட்ட பாதிப்பை காமிராவிற்கு முன் சொன்னாள். ஆண் வக்கிரத்தின் உச்சம் இங்கு வெளிப்படவில்லையா..?

  ஒரு நாட்டில் குற்றவியல் சட்டங்களும் - அதற்கான தண்டனை வரைகளும் இயற்றப்படுவது குற்றவாளிகளுக்குத் தான் பொருந்தும். 'நாங்கள் நல்லவர்களாக இருக்கும் போது குற்றவியல் சட்டங்கள் எதற்கு?" என்று கேள்வி கேட்போமா... யார் நல்லவன் யார் குற்றவாளி என்று பிரித்தறிய முடியாதவரை குற்றவியல் சட்டங்கள் பொதுவாகத்தான் இருக்கும்.

  நடைமுறை வாழ்வில் தங்கள் சொந்த விஷயங்களில் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்று மிக எச்சரிக்கையாக இருப்பவர்கள் (இஸ்லாமிய பெண்களின் மேலதிக உடைக்கு எதிரான கருத்துக் கொண்டுள்ள அனைவரும்) பெண்களுக்கு மட்டும் எச்சரிக்கையுணர்வுத் தேவையில்லை. அது சுதந்திரத்திற்கு எதிரானது என்று ஓட்டு போட்டு இரட்டையாட்டம் ஆடுவது முறையா...

  தமிழ்மணம் வலைப்பதிவில் எழுதும் பெண்கள் 'பெண்களுக்கான ஆடை சுதந்திரம் அதன் அளவு என்ன என்பதற்கான ஒரு பொதுவான கருத்தோட்டத்தை முன் வைக்க முடியுமா..?"

  "இஸ்லாத்தின் மேலதிக உடை எங்களின் சுதந்திரத்தை பறிக்கிறது" என்று எந்த முஸ்லிம் பெண்ணும் இங்கு எழுதும் ஆண்களிடம் வந்து முறையிடாத போது (இது பற்றி "பெண்ணுடையும் ஆணுணர்வும்" என்ற கட்டுரையில் அழுத்தமாக வாதங்களை வைத்துள்ளோம் நியாய சிந்தனையுள்ளவர்கள் அதையும் படித்து விட்டு எதிர்வாதங்கள் இருந்தால் வைக்கட்டும்). இது சுந்திரத்திற்கு எதிரான உடை என்ற சூனியத்தனமான வாதத்தை எங்கிருந்த பெறுகிறீர்கள். விளக்குங்களேன் பார்ப்போம்.

  ஆண்கள் பர்தா போட்டுக் கொள்ளலாமா.. சிறுமிகளுக்கும் கிழவிகளுக்கும் பர்தா ஏன் என்ற வாதங்களுக்கு 'பர்தா' கட்டுரையில் விளக்கம் வரும்.

   

Post a Comment

<< Home